என் மண் என் மக்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பிப்.18ல் திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி

பல்லடத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க திருப்பூர் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஜெனிட்டா ரோஸ்லின்

பல்லடத்தில் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்" பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க திருப்பூர் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. அந்தவகையில் பாரத ஜனதா கட்சியும் இதற்கான பணிகளில் களம் இறங்கியுள்ளது.

என் மண் என் மக்கள்

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நிறைவு விழாவானது வருகின்ற 18 ஆம் தேதி பல்லடத்தில் நடைபெற இருக்கிறது. இந்த பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முன்னதாக ஏற்கனவே இந்த ஆண்டில், இந்த ஒரு மாதத்தில் மட்டுமே இரண்டு முறை தமிழக பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருகையையொட்டி, 5 லட்சம் பேர் பங்கேற்கும் அளவில் மாநாட்டை நடத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமரின் அடுத்தடுத்த தமிழக பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.