vanathi srinivasan pt desk
தமிழ்நாடு

”கிராமங்களும் மேம்படும் வகையில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இருக்கிறது” – வானதி சீனிவாசன்

webteam

கோவை டவுன் ஹாலில் அமைந்துள்ள கோவை வடக்கு சர்வோதயா சங்கம் காதி பவனில் காந்தி ஜெயந்தி சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் கதர் ஆடைகள் வாங்கும் விழா நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

vanathi srinivasan

”டெல்லி பயணம் சிறப்பாக இருந்தது. தேர்தல் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நேற்று நடந்த கூட்டம் சத்தீஸ்கர் ராஜஸ்தான் தேர்தல் தொடர்பான கூட்டம். மின் கட்டண உயர்வு காரணமாக கொங்கு மண்டலம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை. பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர்" என்றார்.

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாது என ப.சிதம்பரம் கூறியதற்கு பதிலளித்த அவர்,

காங்கிரஸ் கட்சியின் மனநிலையிலேயே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார் சிதம்பரம். இது பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் மசோதா. காங்கிரஸ் காலத்தில் எப்படி கொண்டு வருவது போல் கொண்டு வந்து பிறகு நிறுத்தினார்களோ அப்படி இருக்காது.

p.chidambaram

சமீபத்தில் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. அதே போல் வாய்ப்பு வரும் போது குறைக்கப்படும். சர்வதேச விலை மற்றும் நம் பொருளாதாரம் தாங்கும் அளவிற்கு இருக்கும் போதெல்லாம் சிலிண்டர் விலை குறைக்கப்படுகிறது.

ஒபிஸ் பாஜகவில் இணைவதாக பேசப்படும் செய்திகளுக்கு அவர்...

எனக்கு அது பற்றி தெரியவில்லை என பதிலளித்தார். ஜி-20 மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள் அனைவருக்கும் பிரதமர் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தான் பிரதமர் கொடுத்தார். பிரதமரின் ஒவ்வொரு திட்டங்களும் கிராமப்புறங்கள் மேம்படும் வகையில் தான் இருக்கும்.

PM Modi

தமிழ்நாட்டில் செய்யப்படும் உலோக சிற்பச் சிலைகள், கற்சிலைகள், மரச் சிலைகள், அதேபோல புதுச்சேரியில் செய்யப்படும் சிலைகள் என இவை அனைத்தும் உலகளவில் தங்களது விற்பனையை உயர்த்திக் கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நம் பாரம்பரிய தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் சேர்த்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 1.34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது” என்றார்.