தமிழ்நாடு

பிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்

பிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்

webteam

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் இன்றைய பயணத்திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தங்கிருக்கும் சீன அதிபர், காலை 9.05 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கோவளத்தில் மோடி தங்கியிருக்கும் ‘ஃபிஸர்மேன்’ஸ் கவ்’ (FISHERMAN'S COVE) ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு 9.50 முதல் 10 மணி வரை விருந்தினர் சந்திப்பு நடைபெறவுள்ளது. பின்னர், 10 மணி முதல் 10.40 மணி வரை சீன அதிபரும் பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுகின்றனர். அதைத்தொடர்ந்து 10.50 மணி முதல் 11.40 மணி வரை அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

11.45 மணிக்கு பிரதமர் அளிக்கும் மதிய விருந்தில் சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொள்கிறார். அதனை முடித்துக்கொண்டு சரியாக 12.45 ‌மணிக்கு ஹெலிகாப்டர் மூலம், சீன அதிபர் சென்னை விமான நிலையம் செல்கிறார். அரைமணி நேரத்தில் விமான நிலையம் சென்றடையும் அவர், 1.30 மணிக்கு நேபாளம் புறப்பட்டுச் செல்கிறார். ஓட்டலில் இருந்து சீன அதிபர் புறப்பட்டதும் சற்று நேரம் ஓய்வெடுக்கும் மோடி, 1.35 மணிக்கு விமான நிலையம் செல்கிறார்.‌ அவருக்கான டெல்லி விமானம் மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது.