தமிழ்நாடு

இன்று காலை 11 மணி முதல் +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இன்று காலை 11 மணி முதல் +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

jagadeesh

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்கள் இன்று முதல் தத்தமது மதிப்பெண் பட்டியலை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை இணையதளங்களில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை எனக் கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதிக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. இது போன்ற மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 வை தொடர்ந்து 10ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களும் விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.