தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கூடுதல் இடம் - விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்ப்பு

கலிலுல்லா

உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கூடுதலாக இட வசதி செய்து கொடுத்துள்ளது தமிழக அரசு.

அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி விசாரணைக்கு தடை விதித்தது. இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேபோல ஆணையத்தின் அலுவலகம் அமைப்பு 200 சதுர அடி மட்டுமே இருப்பதாக அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அதனடிப்படையில் போதுமான இட வசதிகள் செய்து தர வேண்டும் என அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதை ஏற்றுக்கொண்டு, சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹாலில் செயல்பட்டு வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இடத்தை 200 சதுர அடியில் இருந்து 500 சதுர அடியாக உயர்த்தும் வகையில் பொதுப்பணித்துறை கடந்த வாரம் அளவிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் ஆணையத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கப் பெற இருக்கிறது. விரைவில் உச்ச நீதிமன்றம் ஆணையத்தின் மீதான தடையை நீக்கியுடன், விரைவில் ஆணையத்தின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.