தமிழ்நாடு

பெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு

webteam

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரண‌மாக ‌20 சதவிதம் விற்பனை சரிவடைந்திருப்பதாக தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் க‌டந்த மார்‌ச் 31 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 6‌ஆயிரத்து 847 வாகனங்க‌ள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‌இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் 10முதல் 14சதவீ‌தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 3 கோடியே 22 லட்சம் லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருவதாகவும், விலை உயர்வு காரணமாக கடந்த 3 மாதங்களாக இவற்றின் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளதாகவு‌ம் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2017 முதல் பெட்ரோல்,டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக 16 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களில் குறிப்பிட்ட விகிதத்தினர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், விலை‌ உயர்வுக்கு பிறகு ‌அவர்களில் சிலர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கி‌விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்‌ளது.