18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 234 தொகுதி எம்.எல்.ஏ களுக்கும் மனு அனுப்பி சமூக ஆர்வலர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அழகர் செந்தில் என்பவர் 18 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தபால் மூலமாக மனு அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டார்.
அந்த மனுவில், தமிழகத்தில் சில ஆண்டுகளாக முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை சரியாக வரவில்லை. தமிழக அரசு அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள பூங்காக்களை அரசு மீட்க வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்பும் நூதன போராட்டத்தை மேற்கொண்டார்
மேலும் இந்த கோரிக்கைகளை எல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.