தமிழ்நாடு

தமிழக டிஜிபி செயல்பட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

தமிழக டிஜிபி செயல்பட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

Rasus

மக்களவை தேர்தலின்போது தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலின்போது தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த முறையீட்டை தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே குட்கா முறைகேடு புகாரில் டி.கே.ராஜேந்திரன் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், தேர்தல் நேரத்தில் அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் எனக் கூறியுள்ளார்.  எனவே நியாயமான அதிகாரி ஒருவரை தமிழக டிஜிபியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முறையீட்டை, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.