அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. சயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதனிடையே அத்திவரதர் தரிசன நாட்களை மேலும் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை உயர்நிதமன்றத்தில் இன்று விசாணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், அத்திவரதர் வைபத்தை மேலும் நீட்டிக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.