தமிழ்நாடு

மறைமலை நகர் ஃபோர்டு ஆலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மறைமலை நகர் ஃபோர்டு ஆலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

JustinDurai

ஃபோர்டு தொழிற்சாலை எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கினால் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என மறைமலை நகரில் உள்ள அந்த ஆலையின் நிரந்தர ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறைமலை நகர் ஃபோர்டு தொழிற்சாலையில் 2,600 நிரந்தர தொழிலாளர்களும் அதை சார்ந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். இங்கு ஜூன் மாதத்துடன் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கினால், அதில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என ஆலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாம்: என்எல்சி நிறுவனத்தில் 'கேட்' அடிப்படையில் பணி நியமனம் கூடாது - பிரதமருக்கு முதல்வர் கடிதம்