தமிழ்நாடு

பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முனிசேகர் மீது வழக்குப்பதிவு

பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முனிசேகர் மீது வழக்குப்பதிவு

webteam

ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தமிழகத்தில் இருந்து தனிப்படை காவலர்கள், ராஜஸ்தான் சென்றனர். கொள்ளையர்கள் பதுங்கி இருக்கும் இடத்துக்கு சென்றபோது, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் காவலர்களை தாக்கியுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி விசாரித்த ராஜஸ்தான் காவல்துறை, மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாகச் சுட்டதில்தான் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப பார்கவ் இதைக் கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கிடையில்,‌ பெரியபாண்டியனை சுட்டது யார் என்பது குறித்து சென்னை காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.