தமிழ்நாடு

பெரம்பலூர் டூ சபரிமலை: அன்னதானத்திற்கு அனுப்பப்பட்ட 5 டன் உணவுப் பொருள்கள்

பெரம்பலூர் டூ சபரிமலை: அன்னதானத்திற்கு அனுப்பப்பட்ட 5 டன் உணவுப் பொருள்கள்

kaleelrahman

கேரளா சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு பெரம்பலூரிலிருந்து இரண்டரை டன் உணவுப் பொருட்களை அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கத்தினர் அனுப்பி வைத்தனர்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மலையப்ப நகர் பிரிவு அருகே அகிலபாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் 58 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. ஐய்யப்ப பக்தர்கள்,ஆன்மீக அன்பர்கள் சார்பில் நடைபெற்று வரும் இந்த அன்னதானத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் உனவருந்தி செல்கின்றனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பிவைப்பது என முடிவெடுத்து, அஸ்வின்ஸ் குழுமம் சார்பிலும் ஐய்யப்ப பக்தர்கள் சார்பிலும் சுமார் இரண்டரை டன் உணவு பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

இதையடுத்து சேகரித்த உணவு பொருட்கள் சபரிமலை சன்னிதானத்திற்கு இன்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கேஆர்வி கணேசன் கொடியசைத்து வாகனங்களை வழியனுப்பி வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கத்தின் பெரம்பலூர் யூனியன் பொறப்பாளர்கள் செய்திருந்தனர்.