தமிழ்நாடு

பெரம்பலூர்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி - மலர் தூவி வரவேற்ற மக்கள்!

பெரம்பலூர்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி - மலர் தூவி வரவேற்ற மக்கள்!

kaleelrahman

பெரம்பலூர் அருகே புதுநடுவலூரில் உள்ள ஏரி 14-ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் பொதுமக்கள் பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

பெரம்பலூர் அருகே புதுநடுவலூர் கிராமத்தில் உள்ள ஏரி சுமார் 150-ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 14-ஆண்டுகளாக நிரம்பாத ஏரி தற்போது பெய்து வரும் கன மழையால் முழுமையாக நிரம்பியுள்ளது. 14-ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நள்ளிரவில் ஏரி நிறைந்ததால் பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடினர்.

இதையடுத்து இன்று நீர் நிரைந்த ஏரியில் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பம் குடும்பமாக வந்த பொதுமக்கள் ஏரி நீர் வெளியேறும் பகுதியில் செல்பி எடுத்தும் குளித்தும் மகிழ்ந்தனர்.