தமிழ்நாடு

பெரம்பலூர்: அரசு கலை அறிவியல் கல்லூரியில் ராகிங் பிரச்னை – காவல்துறை வழக்குப்பதிவு

பெரம்பலூர்: அரசு கலை அறிவியல் கல்லூரியில் ராகிங் பிரச்னை – காவல்துறை வழக்குப்பதிவு

Veeramani

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில், ராகிங் பிரச்னையால் ஏற்பட்ட மோதலை அடுத்து ராகிங் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 1200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் BBA துறையில்  பயிலும் பாண்டியன் என்ற மாணவர் ஒருவர் சட்டை பட்டனை போடாமல் வந்ததாகவும் அதனை பார்த்த முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பயிலும் மாணவர் அமுதன் என்பவர் சட்டை பட்டனை போட சொல்லி ராகிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினரும்  கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கல்லூரி நிர்வாகம் தரப்பில் கமிட்டி அமைத்து விசாரணை செய்ததில் இந்த சம்பவம் உறுதியானது. இதையடுத்து இளங்கலை மாணவர் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் முதுகலை மாணவர் அமுதன் மீது  அரும்பாவூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகிங் சட்டம் 1997 ன் படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.