மழை வெள்ள உயிரிழப்புக்கு மக்களின் அஜாக்ரதையே காரணம் என அமைச்சர் மூர்த்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நாராயணபுரம், பாரைப்பத்தி, காதக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களை தூர்வாரி தண்ணீர் நிரப்புவது குறித்து வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்...
அதிமுக ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர் நிலைகளுக்கு முறையாக நீர் சென்று சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது, திமுக ஆட்சியில் கண்மாய்களை பராமரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் ஆற்றில் நான்கு பேர் அடித்து செல்லப்பட்டதற்கு காரணம், மக்களின் ஆஜாக்ரதை தான், அரசின் கவனக்குறைவு அல்ல. அரசு அமைந்து 6 மாதம் தான் ஆகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு என்ன செய்து விட்டார்கள். அவர்கள் செய்யாமல் விட்டதை எல்லாம் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது என்றார்