தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம்: மாற்றுத் திறனாளிகளை தேடிச்சென்று மனுக்களை பெற்ற ஆட்சியர்

மக்கள் குறைதீர் கூட்டம்: மாற்றுத் திறனாளிகளை தேடிச்சென்று மனுக்களை பெற்ற ஆட்சியர்

kaleelrahman

மாற்றுத் திறனாளிகளை தேடிவந்து மனுக்கள் வாங்கிய மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் மக்கள், குறைதீர்ப்பு நடைபெறும் அறைக்கு வந்து தங்களின் மனுக்களை கொடுக்க முடியாத நிலையை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாட் மாற்றுத் திறனாளிகள் இருந்த இடத்திற்கு சென்று அவர்களுடைய மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர், அவருடைய மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிக்கு உத்தரவிட்டதோடு மாற்றுத் திறனாளிகளிடம் உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுப்பார்கள் என்று உத்தரவாதம் அளித்தார்.