கடலூரில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது கோட்டேரி கிராமம். இப்பகுதியில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கனிமவளங்களை என்எல்சி நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடாமல் அப்படியே விட்டுசென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் பனை மட்டை போன்ற பொருட்களால் தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர்.
விவசாய நிலத்தின் பல இடங்களில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உத்தரவுகள் பிறப்பிக்க நிலையில், இன்னும் பல கிணறுகளை மூடப்படாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.