சென்னை காசிமேடு பகுதியில் விசைப்படகுகளை சுத்தம் செய்ய ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற வீரர்கள் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது. கடலுக்குள் இறங்கி விசைப்படகுகளின் அடிபாகத்தை சுத்தம் செய்யும் சவாலான பணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னை காசிமேடு துறைமுகத்தில 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இருக்கு. கடல் தண்ணியால விசைப்படகோட உள்பகுதி மற்றும் வெளிபகுதியில பல பாதிப்புகள் ஏற்படுது. குறிப்பா, படகுகளின் சுற்றுப்புற பகுதிகள்-ல சிப்பிகள் உட்கார்ந்து அதோட புகலிடமா மாத்திடுது. பவளப்பாறை மோதியும் படகு சேதமடைய வாய்ப்பிருக்கு. மேலும், விசைப்படகோட அடியில மீன்வலைகளும் சிக்கிக்கும். இப்படியான டேமேஜ் காரணமா படகு வேகமா செல்ல முடியாது. அதனால, கடலுக்குள்ள போயி விசைப்படகோட அடிப்பகுதியில பராமரிப்பு பணி செய்ய தனி டீமே இருக்கு.
கடந்த காலங்கள்-ல தனித்தனியா வேல செஞ்சி நிலையில, காசிமேடு பகுதிய சேர்ந்த கணேசன் என்பவர் தலைமையில இப்போ 5 பேர் கொண்ட டீம்-மா இயங்கிட்டு வராங்க.
"அண்டர்வாட்டர் டைவிங் ஒர்க்ஸ்" அப்டிங்கிற பேருல வேல செஞ்சிட்டு இருக்க இந்த டீம், 40 அடி நீளம் இருக்க படக க்ளீன் பண்ண 4, 000 ரூபாய் வர கட்டணம் வசூலிக்கிறாங்க. இதுக்காக அவங்க எடுத்துகிற நேரம் அரைமணிநேரம் தான்.
ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற இந்த டீம்-ல இருக்கவங்க, கடலுக்குள்ள போகும்போது முகத்தை முழுசா மூடும் ‘ஃபேஸ் மாஸ்க்’ , மூச்சுவிட தேவையான கருவிகளோட கடலுக்குள்ள இறங்குறாங்க. இந்த கருவிகள் மூலமா சுமார் 5 மணி நேரம் வரை கடலுக்குள்ள இருக்கலாம். ஆனாலும், உயிர பணயம் வச்சித்தான் இந்த வேலய செய்றதா அவங்கள் சொல்றாங்க. விசைப் படகுகளோட அடிப்பாகத்தில பராமரிப்பு பணிகள செய்வது மட்டும் இல்லாம, கடல்-ல மூழ்குன படகுகளையும் பத்திரமா மீட்டு கரைசேர்க்குறாங்க இந்த டீம்.