தமிழ்நாடு

தனிமனித இடைவெளி எங்கே?: சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்!

தனிமனித இடைவெளி எங்கே?: சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்!

webteam

சென்னை மாதவரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பழம் , பூ அங்காடிகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பழம் , பூ அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இயங்கும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்தது. அதன்படி 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அங்கு அமைக்கப்பட்டன. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பழ மற்றும் பூ சந்தை இன்று அதிகாலை முதல் இயங்கத் தொடங்கியது.

மக்கள் மற்றும் குறு வியாபாரிகள் ஏராளமானோர் அதிகாலை முதலே வருகை தருகின்றனர். விவசாயிகள் கொண்டு வந்த பூக்களையும், பழங்களையும் மக்களும், சிறு வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தற்காலிக மார்க்கெட்டில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு நிலவுகிறது.