தமிழ்நாடு

கம்பளிப் பூச்சிகளால் தூக்கத்தை தொலைத்த சென்னை மக்கள்

webteam

சென்னை கிண்டியிலுள்ள லேபர் காலனி பகுதியில் கம்பளி பூச்சிகள் படையெடுப்பால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். 

லேபர் காலனி பகுதிகளில் மரங்கள், சிறுசிறு மைதானங்கள் உள்ள நிலையில், மழைக்காலங்களில் கம்பளி பூச்சிகள் பெருமளவில் உற்பத்தியாவதாக மக்கள் கூறுகின்றனர். வீடுகளை நோக்கி கம்பளி பூச்சிகள் படையெடுப்பதால் இரவில் தூக்கம் தொலைந்து தவிப்பதாகவும் அவர்கள் குமுறுகின்றனர். இரவில் உறங்கும் போது கம்பளி பூச்சி உடலில் ஊர்ந்து செல்வது போன்று தோன்றுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் இந்தப் பிரச்னை நீடிப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிவாசிகள் குறைகூறியுள்ளனர்.