தமிழ்நாடு

விழுப்புரம்: ஜாமீன் பெற்ற கைதிகளை வெளியே அனுப்ப லஞ்சம்? சிறை முன் குவிந்த மக்கள்

விழுப்புரம்: ஜாமீன் பெற்ற கைதிகளை வெளியே அனுப்ப லஞ்சம்? சிறை முன் குவிந்த மக்கள்

webteam

விழுப்புரம் மாவட்ட சிறையில் ஜாமீன் பெற்ற கைதிகளை வெளியே அனுப்புவதற்கு லஞ்சம் கேட்டதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட சிறைக்கு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் வேடம் பட்டு என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது விழுப்புரம் மாவட்ட சிறை. விழுப்புரம் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் விசாரணை கைதிகள் இந்த சிறையில்தான் அடைக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்ட கைதிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து கைதிகளை வெளியே விடுவதற்காக ஜாமீன் நகல் வழங்கப்பட்ட நிலையில் சிறைத்துறை சார்ந்த சிறைக்காவலர்கள், ஒவ்வொரு கைதிகளுக்கும் 500 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் அப்போதுதான் கைதிகளை வெளியே அனுப்புவோம் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட சிறைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.