தமிழ்நாடு

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்

EllusamyKarthik

நேற்று முழு முடக்கத்திற்கு பின்னர், இன்று காலை கடைகள் திறந்ததும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் மக்கள் குவிந்தனர்.

திருத்துறைபூண்டியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, கடைகளில் தனி மனித இடைவெளியின்றி மக்கள் குவிந்தனர். காலை பத்து மணி வரை மட்டுமே, கடைகள் திறக்கப்படும் என்பதால், கடைவீதிகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வாகனங்களில் வந்த மக்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மார்க்கெட்டில் ஏராளமானோர் தனிமனித இடைவெளியின்றி குவிந்ததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைகளில் மக்கள் குவிந்ததால், காளியம்மன் கோயில் சுற்று வட்டார பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.