வால்பாறை அருகே வலம் வரும் ஒற்றை காட்டுயானையை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தி அந்தப் பகுதியினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக யானை ஒன்று சுற்றி வருகிறது. வனப்பகுதிக்கு விரட்டிய பிறகும், இரவு நேரங்களில் அந்த யானை குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது. 2 நாட்களுக்கு முன் இறுதிச்சடங்கு கூட்டத்தில் நுழைந்த யானை அங்கிருந்தவர்களை தாக்கியது. அதனையடுத்து அந்த யானையை விரட்ட வனத்துறையினர் கும்கி யானையை வரவழைத்துள்ளனர்.
இந்தநிலையில், யானையால் அச்சமடைந்த மக்கள் அதனை மயக்க ஊசி போட்டு பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். யானையை மயக்கி ஊசி செலுத்திப் பிடிக்க வலியுறுத்தி வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மழையில் குடை பிடித்தபடி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.