தமிழ்நாடு

வால்பாறை: குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்- அச்சத்தில் பொதுமக்கள்

வால்பாறை: குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்- அச்சத்தில் பொதுமக்கள்

webteam

வால்பாறை அருகே கோயில் அலுவலகத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள், கடைகள், நியாய விலைக் கடைகள் போன்றவைகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று வால்பாறை அருகே தோனிமுடி மூன்றாவது பிரிவு பகுதிக்கு வந்த 4 காட்டு யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோயில் பொருட்கள் வைப்பறையின் ஜன்னல் கதவு மற்றும் சுவரை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப் பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.