தமிழ்நாடு

ஆழ்துளைக் கிணறுகளை மூட சொன்னால் அதிகாரிகள் மெத்தனம்?: பொதுமக்கள் புகார்..!

ஆழ்துளைக் கிணறுகளை மூட சொன்னால் அதிகாரிகள் மெத்தனம்?: பொதுமக்கள் புகார்..!

webteam

திருச்சி அருகே உயிர் பலி ஏற்படும் முன் பயன்பாட்டில் இல்லாத 3 ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே இனம் சமயபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 1-வது மற்றும் 7-வது வார்டு பகுதி மக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க ஊராட்சி ஒன்றியம் பொது நிதியிலிருந்து, ஆழ்துளைக் குழாய் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்து வந்தது. 

கோடைக்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் இப்பகுதியில் அமைந்துள்ள போர்வெல்லிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் இங்கு இருந்த மூன்று ஆள்துளை கிணறுகளும் தண்ணீரின்றி பயன்பாட்டில் இல்லாமல் போனது. 

இதனை சரிசெய்ய சென்ற அதிகாரிகள் சரிசெய்யவும் இல்லை. ஆழ்துளைக் குழாய்களை மூடவும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். 

எனவே திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் சுஜித் உயிரிழந்த சம்பவம்போல இப்பகுதியிலும் அசம்பாவிதம் ஏற்படும் முன் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.