தமிழ்நாடு

“நீதிமன்ற தீர்ப்பை காஞ்சிபுர பெருநகராட்சி கண்டுகொள்ளவில்லை” - மக்கள் புகார்

webteam

உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் உதாசினப்படுத்துவதாக காஞ்சிபுரம் பெருநகராட்சி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

காஞ்சிபுரம் பெருநகராட்சி அதியமான் நகரின் மையப்பகுதியில் மழைநீர் மற்றும் வடிகால் நீர் வடிந்து செல்வதற்கு வசதியாக இரட்டை
கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் சுமார் 20 ஆண்டு காலமாக பல்லவன் நகர் குடியிருப்பு மற்றும் வீட்டு வசதி வாரிய அரசுக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் உபயோகப்படுத்தும் சாக்கடை நீர் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு சுத்தரிக்கப்படாமலேயே பம்பு செய்து விடப்பட்டு வந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட இந்த நகரில் நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி,சென்னை
 உயர்நீதிமன்றதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வழக்குத் தொடுத்தனர். அப்போது பேரூராட்சி நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றமே அதை பொதுநல வழக்காக எடுத்து விசாரணை செய்து உத்தரவை  பிறப்பித்தது.

அதில் கால்வாயை மாசுக் கட்டுப்பாடு வாரியமும், டவுன் பஞ்சாயத்தும் சேர்ந்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று உண்மை நிலையை அறிந்து நீரை சுத்திகரிப்பு செய்து மாற்று வழியில் விடவேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இப்பணி 8 வார காலத்திற்குள் 
முடிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை தீர்ப்பினை செவிலிமேடு பேரூராட்சி செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2012ம் ஆண்டு செவிலிமேடு பேரூராட்சியை காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைப்பட்டது. இதன் தொடர்சியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் நகராட்சிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை மனு செய்தும் எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நகரில் நிலத்தடி தற்போது மிகவும் மாசுபடுவதோடு இரட்டை கால்வாயில் வரும் கழிவு நீரினால் நகரில் வசித்துவரும் மக்கள் அடிக்கடி பலவிதமான நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.