திருச்சி மாநகராட்சி ஊழியருடன் மக்கள் வாக்குவாதம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சாலையில் அலைந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி அதிகாரி.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாட்டின் உரிமையாளர்கள்

திருச்சி: சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் நேரிட்ட நிலையில், சாலையில் திரிந்த மாடுகளை மாநகராட்சி அதிகாரி பிடித்துள்ளார். இதனால் மாட்டின் உரிமையாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

PT WEB

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதை கண்டித்து சுகாதார ஆய்வாளருடன் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகர பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வன் பிடித்து கோணக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சியின் பட்டியில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி பொன்னகர் பகுதியில் மாடுகளை பிடித்தபோது ஒப்பந்ததாரருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒப்பந்ததாரர் பிடித்துச் செல்லும் மாடுகள் பட்டியில் இருப்பதில்லை என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தகராறின் போது 55ஆவது வார்டு கவுன்சிலர் ராமதாஸை ஒப்பந்ததாரர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த சுகாதார ஆய்வாளரிடமும் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அனைத்து தரப்பினரும்
பாதிக்கப்படுவதாகவும், பிடிக்கப்படும் மாடுகளுக்கு முறையாக அபராதம் வசூலித்து ரசீது வழங்கப்படுவதாகவும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.