தமிழ்நாடு

ஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்

ஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்

Rasus

ஏடிஎம்மில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லையென்றால் வங்கிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என நுகர்வோர் குறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் ‌அங்குள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் அந்த நபர். அது மட்டுமில்லாமல் இதுதொடர்பாக நுகர்வோர் குறைதீர்ப்பாயத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரை விசாரித்த குறை தீர்ப்பாயம், வங்கிக்கு ‌இ‌ண்டாயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி நிர்வாகம், ஏடிஎம்மில் பணம் வராததற்கு இன்டர்நெட் சேவை இல்லாததே காரணம் என்பதால் அதற்கு தாங்கள் பொறுப்பில்லை என்று வாதிட்டது. மேலும், புகார் தெரிவித்தவர் வங்கியின் வாடிக்கையாளர் இல்லை என்றும் கூறியது. ஆனால், இந்த வாதத்தை ஏற்காத குறைதீர்ப்பாயம் வங்கி ஏடிஎம்மில் குறைந்தபட்ச பணம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.