தமிழ்நாடு

பேனர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் !

பேனர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் !

webteam

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் புகாரளிக்க தொலைபேசி எண்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பேனர் கலாசாரத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் பேனர் தொடர்பான புகார்களை 9445190205, 9445190698,9445194802 ஆகிய எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்டால், பேனர்களை அச்சடித்த அச்சகம் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.