தமிழ்நாடு

முன்பதிவு கட்டாயத்தால் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

முன்பதிவு கட்டாயத்தால் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

webteam

கோவை அரசு மருத்துவமனையில் முன்பதிவு செய்த பின்னரே ஆக்ஸிஜன் படுக்கைகள் ஒதுக்கப்படுவதால் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் வாகனங்களிலேயே காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்கு நோயாளிகள் பெயர்களை பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவசர தேவைக்காக வரும் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதிகள் இன்றி அவசர ஊர்தியிலேயே மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிருக்குப் போராடும் மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.