தமிழ்நாடு

காஞ்சிபுரம்: விதியை மீறி 100 அடி கொடிக்கம்பத்தில் வானுயர்ந்து பறக்கும் கட்சிக்கொடிகள்

Sinekadhara

காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரிவர பின்பற்றாமல் கட்சிக்கொடிகளை வானுயர பறக்கவிட்டு வருகின்றனர்.

தேர்தல் நடக்கும் உள்ளாட்சி அமைப்பிலிருந்து, 5 கி.மீ சுற்றளவிற்கு நடத்தை விதிகள் அமலாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் அறிவிப்பு வந்து ஏழு நாட்களாகியும் காஞ்சிபுரத்தில் விதிமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டும் அதற்காக எந்த ஒரு பயனும் இல்லை எனத் தெரிகிறது.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதாக தெரியவில்லை. இதை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் தேர்தல் அலுவலர்கள் யாரும் கண்டுகொண்டவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இங்கு பல ஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக, பாமக விசிக உள்ளிட்ட கட்சிகளின் கொடிக்கம்பங்களில் கொடிகள் வான் உயரத்திற்கு பறந்து கொண்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிகள் பறப்பதாகவும், பல தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பதிலளிக்கவும் இல்லை எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.