பரிதாபங்கள் வீடியோவில் ஒரு காட்சி..  pt web
தமிழ்நாடு

'லட்டு' பரிதாபங்கள் | யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்ட வீடியோ.. மன்னிப்பு கேட்ட டீம்!

பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை விமர்சிக்கும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோ, தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது.

PT WEB

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் தலைப்பில் ஒரு வீடியோ வெளியானது.

வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளை கடந்தாலும், பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து அவர்கள், அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கினர். இது குறித்து கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடைசியாக வெளியான வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும், யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திருப்பதி லட்டு குறித்து பேசி நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரிய நிலையில், தற்போது யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகரும் மன்னிப்பு கோரியுள்ளனர்.