தவெக மாநாடு - பந்தல்கால் நடும் விழா புதிய தலைமுறை
தமிழ்நாடு

தவெக மாநாட்டிற்கு பந்தல்கால் நடும் விழா: ஆயிரக்கணக்கில் குவிந்த தவெக தொண்டர்கள்! #Video

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலையிலேயே நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரக்கூடிய 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநாட்டிற்கு பந்தல்கால் நடும் விழாவானது இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பின்படி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் விக்கிரவாண்டியில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தவெக பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் முதல் மாநாட்டுக்கான நிகழ்ச்சி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் விக்கிரவாண்டிக்கு வருகை தந்தனர்.

பந்தல்கால் நடும் விழாவிற்கு கும்பகோணம், தஞ்சாவூத், திருப்பூர், வேலூர் ஊட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகளில் பலரும் தங்கள் ஊரில் உள்ள கோயில், தர்கா மற்றும் தேவாலயங்களில் இருந்து புனித நீர் கொண்டு வந்தனர். அந்த புனிதநீரை கொண்டு பூஜை பந்தல்காலுக்கு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் புடைசூழ பந்தல்கால் நடப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததைகண்டு மகிழ்ச்சி அடைந்த தவெக தொண்டர்கள் பந்தல்கால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.