பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் இரண்டு நாட்களுக்கு பரப்புரை செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த 22ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரிஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற 28-ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குனி உத்திரத் திருவிழா முதல்நாளான 27 மற்றும் பங்குனி உத்திர தினமான 28ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பழனி நகர் பகுதிக்குள் தேர்தல் பரப்புரை செய்ய பழனி கோட்டாட்சியர் ஆனந்தி தடை விதித்துள்ளார்.