தூத்துக்குடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“பொங்கல் பரிசுடன் பனங்கிழங்குகளை வழங்க வேண்டும்” பனைத்தொழிலாளர்கள் வலியுறுத்தல்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பனங்கிழங்கு அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. பொங்கல் பரிசுடன் பனங்கிழங்கையும் வழங்க பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

PT WEB

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பனங்கிழங்கு அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. பொங்கல் பரிசுடன் பனங்கிழங்கையும் வழங்க பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு எட்டயபுரம், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்கு அறுவடை செய்யும் பணியில் பனைத்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் பனங்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு போதிய அளவிலான மழை பெய்ததால் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஒரு கிழங்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது எனவும், 20 எண்ணம் கொண்ட ஒரு கட்டு100 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது எனவும் பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். அத்தோடு பொங்கல் பரிசுடன் பனங்கிழங்குகளையும் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.