வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தாததால், பழனியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள புளியம்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் கடனாக 25 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். தற்போது வரை 50 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முத்தையா இறந்து விட்டதால், அவரது மனைவி பாலம்மாள் வட்டி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக பாலம்மாளால் வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாலம்மாளின் வீட்டிற்கு வந்த பழனிச்சாமி, கடுமையாக திட்டி முள் வெட்டிக் கொண்டிருந்த பாலம்மாளின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி வெட்ட முயன்றுள்ளார். இதனைக் கண்ட பாலம்மாளின் மகள் குகமதி தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரது தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த குகமதி, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.