பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் எண்ணப்பட்டதில் சுமார் 1.90 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பட்டுப்புடவைகள், ரிஸ்ட் வாட்சுகள் போன்ற காணிக்கைகள் வந்திருந்தன.
பழனி தண்டாயுதபாணி மலைக்கோயில் உண்டியல்கள் கடந்த 26 நாட்களில் நிரம்பியதால் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ஒரு கோடியே 88 இலட்சத்து 73 ஆயிரத்து 930 இருந்தது. தவிர தங்கம் 954 கிராமும், வெள்ளி 9 ஆயிரத்து 985 கிராமும் கிடைத்தன.
பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகள் 821 இருந்தது. இவை தவிர பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காயும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணியின்போது பழனிகோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.