தமிழ்நாடு

பழனிமுருகன் கோயில் உண்டியலின் 28 நாட்கள் காணிக்கை

பழனிமுருகன் கோயில் உண்டியலின் 28 நாட்கள் காணிக்கை

webteam

பழனி முருகன் கோயிலில் 28 நாள் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.1.54 கோடி கிடைத்துள்ளது.

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, மலை மீதும் மலை அடிவாரத்திலும் தேவஸ்தான நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம் செலுத்துகின்றனர். அத்துடன் தங்கம், வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக செலுத்திவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 28 நாட்களாக பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மலை மீதுள்ள கார்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து எண்ணப்பட்டது. 

இதில் ரொக்கமாக ரூ.1.54 கோடி இருந்தது. தங்கமாக 635 கிராமும், வெள்ளியாக 9,970 கிராமும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளின் கரன்சி நோட்டுகள் 1,051 கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.