பழனியில் ரோப்கார் சேவை 40 நாட்களுக்கு ரத்து pt desk
தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம் - காரணம் இதுதான்!

வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை இன்று முதல் (7ம் தேதி) 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை, யானை பாதை, ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

Palani temple

பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று முதல் (7.10.24) முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.