ஓவியப்பயிற்சி புதிய தலைமுறை
தமிழ்நாடு

கோவை | மனநலத்தை மேம்படுத்த பெண்களுக்கென Mandala Art பயிற்சிகள், போட்டிகள்!

கோவையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்களின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் கோலப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

PT WEB

கோவை பாரதியார் பல்கலைக்கழக சமூக நலத்துறை சார்பில், பொருளாதாரத்தில் நலிவடைந்த அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்களின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு கோலம் மற்றும் மண்டலா வகை ஓவியப் பயிற்சி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நரசிபுரம் கிராமத்தை சேர்ந்த 50 பெண்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்த கொண்ட பெண்கள் வரைந்த ஓவியங்கள், கலைப்படைப்புகளின் எழுச்சியூட்டும் ஓவியங்களாகவும், பார்வையாளர்களை கவரும் வகையிலும் அமைந்தன.

இந்த முன்முயற்சியானது, அவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருவதோடு, கலைப் படைப்பில் ஒரு புதிய பாதையைத் தொடர செய்யவும், அவர்களை ஊக்குவிப்பதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.