பாப்பம்மாள் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

விவசாயப் பணியில் புரட்சி| பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் மரணம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையைச் சேர்ந்த 108 வயதான பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் இன்று (செப்.27) உயிரிழந்தார்.

Prakash J

வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள், இன்று காலமானார். 2021ஆம் ஆண்டு இயற்கை விவசாய பணிக்காக மத்திய அரசு, அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. அதுபோல், திமுக பவள விழாவின்போது பெரியார் விருதும், புதிய தலைமுறையின் வாழ்நாள் சாதனையாளரும் பெற்றவர் அவர். 2021ஆம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்திருந்தபோது பாப்பம்மாளை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள், இயற்கை விவசாயத்தில் நாட்டம் கொண்டவராக விளங்கி வந்தார். தனது கணவரின் மறைவுக்கு பின் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தை கற்ற பாப்பம்மாள், 100 வயதை கடந்தபிறகும்கூட வயலில் இறங்கி இயற்கை விவசாயம் செய்துவந்தார். அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: IND Vs BAN டெஸ்ட் போட்டி| வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்!