கிராமிய நடனக்கலைஞர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ட்விட்டர்
தமிழ்நாடு

கோவையை சேர்ந்த கிராமிய நடனக்கலைஞர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது!

“பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிராமிய நடனக்கலைஞர் பத்ரப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

PT WEB

கலை, சமூகப் பணி, பொதுசேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில் கோவையை சேர்ந்த வள்ளி கும்மி கிராமிய கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்ந்தரராஜன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் அவர்,

“கோவையைச் சேர்ந்த சகோதரர் திரு.பத்ரப்பன் அவர்கள் வள்ளி கும்மி கிராமிய நடனக்கலையில் சிறப்பான நடனத்திறமையை வெளிப்படுத்தியதற்கும், பெண்களுக்கு சிறப்பாக வள்ளி கும்மி கிராமிய நடனக்கலை பயிற்சி அளித்ததற்காகவும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அவரது சிறப்பான கலைப்பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமர மக்களை தேடி தேடிச் சென்று பத்ம விருதுகள் அளித்து கெளரவிக்கும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.