செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு குறுக்கே ஆந்திரா அரசு கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் பகுதியில் கட்டியுள்ள தடுப்பணையை கடந்து தமிழகத்திற்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.
அதேபோல் இந்த பகுதிகளில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக புல்லூர், சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், உள்ளிட்ட பகுதிகளில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுளளன.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.