பா ரஞ்சித் pt
தமிழ்நாடு

"சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்” - புத்தகம் வெளியிட்ட பா.ரஞ்சித்

பௌத்த தளங்களில் அண்ணன் ஆம்ட்ராங்க் செய்த வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

PT WEB

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 16ஆம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் மனைவி வழக்கறிஞர் பொற்கொடி, மகள் சாவித்திரி பாய் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய பகுஜன் சமாஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கட்டாயம் தேவை என வலியுறுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங்க் பெயரில் புத்தகம் வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்....

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பப்ளிகேசன் சார்பில் “சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்” என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டார்.

புத்தக வெளியீட்டுக்கு பிறகு பேசிய ரஞ்சித், “பௌத்த தளங்களில் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் செய்த வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கு எப்படி அவர் பாதுகாப்பாக இருந்தாரோ அதேபோல் நாமும் இனி இருக்க வேண்டும். மற்றபடி அரசுக்கான கோரிக்கைகள் குறித்து நேற்றே பேசிவிட்டோம். நீலம் பப்ளிகேசன்ஸ் சார்பில் "சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க்" என்ற பெயரில் புத்தகம் தயாரித்து வெளியிட்டுள்ளோம்” என்று பேசினார்.