தமிழ்நாடு

தவறான குற்றச்சாட்டு என்பது உறுதியாகிவிட்டது: ப.சிதம்பரம்

தவறான குற்றச்சாட்டு என்பது உறுதியாகிவிட்டது: ப.சிதம்பரம்

webteam

ஐக்‌கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது சுமத்தப்பட்ட கு‌ற்றச்சாட்டுகள் தவறானவை‌ என்பது இந்த தீர்ப்பின்‌‌ மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ‌முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இன்று விடுதலை செய்தார். குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறி விட்டதாகவும் எனவே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி ஒரே வரியில் தீர்ப்பை அளித்தார். 

ராசா, கனிமொழி தவிர கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார், ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பல்வா உள்ளிட்ட 17 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 7 ஆண்டுகாலம் நீடித்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. தீர்ப்பின் ‌நகல் கிடைக்கப்பெற்ற பின்னர் அது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐக்‌கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது சுமத்தப்பட்ட கு‌ற்றச்சாட்டுகள் தவறானவை‌ என்பது இந்த தீர்ப்பின்‌‌ மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.