தமிழ்நாடு

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு - பழுதான இயந்திரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு - பழுதான இயந்திரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

Sinekadhara

ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் இன்று இயந்திரக் கோளாறு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்டமாக ஐந்து டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழுதான இயந்திரங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்ததால் இயந்திரம் பழுதானதாக வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விரைவில் பழுது சரிசெய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.