தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்

Veeramani

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்றே ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியது ஸ்டெர்லைட் ஆலை. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பதால் உற்பத்தியை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஏற்கனவே அரசு வாதிட்டது.

இந்த சூழலில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு செய்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு 2 மெகாவாட் மின்சாரம் வழங்கவும் தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை தொடர்ந்து இயக்கும் நிலையில் வைத்திருக்க தொடர்ந்து மின்சாரம் வழக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.