தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதி: தலைவர்கள் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதி: தலைவர்கள் கருத்து

sharpana

தமிழக அரசு இன்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதத்திற்கு தற்காலிகமாக திறக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

திமுக எம்.பி கனிமொழி “தமிழக அரசின் சார்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் என அனைவரையும் இணைத்து ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழுவை ஏற்படுத்தவேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

”ஆக்சிஜனுக்கான தேவை இருப்பதால் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்” என்று பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.