ஒடிசாவில் இருந்து ரயிலில் வந்த 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை, மதுரை, செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 685 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அம்மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், மேலும் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன், ரயில் மூலம் நள்ளிரவு சென்னை வந்தடைந்தது.
பின்னர் வேறு லாரிகளில் ஆக்சிஜன் மாற்றப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவ அவசரம் என்பதால், ஆக்சிஜன் லாரிகளுக்கு பாதுகாப்பாக காவல்துறை வாகனங்களும் உடன் சென்றன.