தமிழ்நாடு

சேலம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: கொரோனா நோயாளிகள் அவதி

kaleelrahman

சேலம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

கேலத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று ஒருநாளில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 550ஐ நெருங்கியிருக்கிறது. 3500க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து இன்று அது உறுதியாகி இருக்கிறது. சேலம் லைன்மேடு பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துமனையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவரும் 20 கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.